தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்


ADDED : நவ 16, 2010 05:11 AM

Google News

ADDED : நவ 16, 2010 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்ய ரூபமாகவும், அன்பு வடிவமாகவும் கொண்ட இறைவனை அடைய விரும்பும் பக்தர்கள் உண்மையுடன் நடந்து,

அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்.

* பகவானை உணர, நாம் சிரமப்பட

வேண்டியதில்லை. அவர் எங்கும்

இருக்கிறார், எல்லோரிடமும் இருக்கிறார். அனைவரிடத்திலும் இறைவனைப் பாருங்கள்.

அனைவரையும் நேசியுங்கள். அதுவே இறைவனுக்குப் பிரியமான பக்தி மார்க்கம்.

* பூரணமான உறுதியான நம்பிக்கையுடன் இறைவனை நாட வேண்டும். இதயப்பூர்வமாக உணர்ந்து பாடுவதன் மூலம் அவரை அணுக வேண்டும். இதய சுத்தத்துடன் ஹரியின் நாமத்தைப் பூஜிக்க வேண்டும்.

* மாணவமணிகள் நல்லவர்களாக இருந்தால் போதாது, அவர்களுடைய நண்பர்கள், தோழியர் ஆகியோரிடம் நற்பண்புகளை உருவாக்க வேண்டும்.

* பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் நமக்குள்ளேயே இருக்கின்றனர். அவர்களை நாம் வெளியே தேட

வேண்டியதில்லை. ஆன்மிக உணர்வை பெற்றால்

மனிதன் இறையருளால் அபூர்வ சக்தியைப் பெறுகிறான். இதன்மூலம் தெய்வீக அருளையும், மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

-சாய்பாபா 



Trending





      Dinamalar
      Follow us